தமிழ்நாடு

நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்கக் கூடாது: காங்கிரஸ், பாமக வலியுறுத்தல்

DIN

நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெடுவாசலில் ஒன்றுகூடி போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய பாஜக அரசோ மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது.
திட்டம் குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் எதிர்ப்புக்கு இரையாக வேண்டிய நிலை ஏற்படும். நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
ராமதாஸ்: திட்டத்தைச் செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. இதற்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவும், எழுச்சியும் மத்திய, மாநில அரசுகளை பதற்றமடைய செய்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. பொதுநலனுக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதுதான் நல்ல ஆட்சிக்கு அழகு.
அதைவிடுத்து அடக்குமுறைகளால் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ வழி செய்துவிடும். எனவே, திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT