தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை: பிரணாப்பிடம் ஓபிஎஸ் அணி மனு

DIN


புது தில்லி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஓபிஎஸ் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலதி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள், குளறுபடிகள் உள்ளன. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், குடியரசுத் தலைவரை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை தான் பார்த்ததாக செங்கோட்டையன் கூறுவது பொய். ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு விசாரிக்க தகுதியில்லை. எங்களது கோரிக்கைகளை குடியரசுத் தலைவர் குறிப்பெடுத்துக் கொண்டார் என்று மைத்ரேயன் கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மைத்ரேயன், தீபா யார் என்றே எனக்குத் தெரியாது என்று தம்பிதுரை கூறினார். பிறகு தீபக் யார் என்றே தெரியாது என்றார். இன்னும் சில காலத்தில்  சசிகலா என்றால் யார் என்றே தெரியாது என்று கூட சொல்வார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT