தமிழ்நாடு

நீதிபதியின் அறிவுரையை ஏற்று சசிகலாவுக்கு எதிரான மனு வாபஸ்

DIN


சென்னை: அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனு, நீதிபதியின் அறிவுரையை ஏற்று வாபஸ் பெறப்பட்டது.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அவரது தோழி சசிகலா, அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அதிமுகவில் தாற்காலிகப் பொதுச் செயலர் நியமனத்துக்கு கட்சி விதிகளில் இடமில்லை என்று கூறி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, உட்கட்சி விவகாரம் குறித்து ஏன் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று பொது நலன் மனுவை கே.சி. பழனிசாமி வாபஸ் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT