நெய்வேலியில் ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சிப் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பண்ருட்டி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில், நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நெய்வேலியிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.