தமிழ்நாடு

மாணவர்கள் மீது தாக்குதல்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு

DIN

ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவின் விவரம்:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மாணவர்களும், இளைஞர்களும் அறவழிப் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் போராடிய இளைஞர்களைக் கலைக்க காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் சட்டம் -ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேறிய பிறகும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்கள் மீது தடியடியும் தொடர்கிறது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்காக
எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்பதைவிட காவல் துறையின் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகச் செயல்களாக அவை இருக்கின்றன.
எனவே, ஆளுநர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு போராடுபவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதைத் தவிர்க்கவும், இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அனைவரையும் விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT