தமிழ்நாடு

நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல: ப.சிதம்பரம் கருத்து

DIN


காரைக்குடி: இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ஜிஎஸ்டி என்பது ஒரே வரி. நாடு முழுவதும் ஒரே வரி என்பதுதான் கொள்கை. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல.

ஒரே வரி இந்தியாவில் இருக்க வேண்டும். அதுதான் ஸ்டேண்டர்ட் வரி. அதனுடன் பிளஸ் ஸ்டேண்டர்ட், மைனஸ் ஸ்டேண்டர்ட் வரி இருக்க வேண்டும் என்பதே திட்டம். 

ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் முதல் விளைவாக பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வரி முறை சிறு குறு வியாபாரிகளைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT