இரட்டை இலை எங்களுக்கே!: திருச்சியில் ஓ.பி.எஸ். பேட்டி
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்றார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
மணப்பாறையில் நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்த அவரிடம் , விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:
கேள்வி: இரட்டை இலைச் சின்னத்தை மீட்க அதிமுக அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏராளமான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்: அதிமுக சட்ட விதிகளின்படிஇரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.
கேள்வி: தங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக, சசிகலா கணவர் நடராஜன் தெரிவித்துள்ளாரே?
பதில்: அது முற்றிலும் வடிகட்டிய பொய்.
முன்னதாக ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்க, ஓபிஎஸ் அணி நிர்வாகிகளான பெரம்பலூர் மாநிலங்களவை உறுப்பினர் மருதராஜா, முன்னாள் அமைச்சர்கள் டி.பி. பூனாட்சி, மு.பரஞ்சோதி, வி.என்.ஆர். சிவா, சிவா, நாட்டாமை சண்முகம் உள்ளிட்ட பலரும் விமான நிலையம் வந்திருந்தனர்.