தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

DIN

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிச் செல்லும் கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கெங்கரை அருகில் உள்ள நடுஹட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (29) கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்தார்.
கண் வலி காரணமாக கடந்த வாரம் 2 கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டின் முற்றத்தில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சோலூர்மட்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT