தனியார் பால் நிறுவனங்கள் குறித்துப் பேச ராஜேந்திர பாலாஜிக்குத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் பால் நிறுவனங்கள் குறித்து உரிய ஆதாரங்கள் இன்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் குறித்து உரிய ஆதாரங்கள் இன்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக ஆதாரமின்றி தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதாக தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
தனியார் பால் நிறுவனங்களான ஹாட்சன், டோட்லா, விஜய் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக் கூடாது என்றும், இன்னும் 4 வாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த மே 24ம் தேதி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.