மருத்துவ சேர்க்கை: 85% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - விஜயபாஸ்கர்
மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜ
சென்னை: மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வந்ததும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நிதி ஆயோக் பரிந்துரையை ஏற்று மருத்துவக் கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.