தமிழ்நாடு

சன் டிவி குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் முடக்‍கப்பட்ட சன் டிவி குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது என்று 

DIN

புதுதில்லி:  ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் முடக்‍கப்பட்ட சன் டிவி குழுமத்தின் 743 கோடி ரூபாய் சொத்துக்‍களை விடுவிக்‍க முடியாது என்று  உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதுடன் அமலாக்‍கத் துறை புதிய வழக்‍கு தொடரவும் அனுமதி அளித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சன் டி.வி. குழுமத்தின் 743 கோடி ரூபாய் அமலாக்‍கப் பிரிவு முடக்‍கியிருந்தது. இதனை விடுவிக்‍கக்கோரி தொடரப்பட்டிருந்த. வழக்‍கை விசாரித்த உச்சநீதிமன்றம், சன் டி.வி குழும சொத்துக்‍களை விடுவிக்‍க மறுத்துவிட்டது.

மேலும், மாறன் சகோதரர்களை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்‍கு எதிராக தடை விதிக்‍க, வழக்‍கு தொடரவும் அமலாக்‍கப் பிரிவுக்‍கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT