தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் வாக்களித்தனர்

DIN


சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில், முதல்வர் பழனிசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் முதல் வாக்கினை நான் பதிவு செய்தேன். ஏற்கனவே அதிமுக சார்பில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்தபடி அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறோம் என்றார்.

அதன்பிறகு வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பதவியேற்பார் என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT