தமிழ்நாடு

மருத்துவக் கல்வியில் 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு! 

DIN

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில  பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணை ரத்து விவகாரத்தில் , தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்துள்ளது.  இதனால், மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெறும் நூறு இடங்களை மட்டுமே சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் பிடிக்க முடியும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 

தமிழக அரசின் சார்பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமிழக அரசு தனக்கு உள்ள அதிகாரத்தினை பயன்படுத்திதான் அரசாணை பிறப்பித்துள்ளது. இது போன்ற அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அவசர மனுவாக கருதி விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT