தமிழ்நாடு

பிளாஸ்டிக், மதுபானங்களுக்குத் தடை: பாபநாசம் சோதனைச் சாவடியில் வனத் துறையினர் தீவிர சோதனை

தினமணி

காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் பாபநாசம் சோதனைச் சாவடியில் வனத் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாபநாசம் வனப் பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்தய்யனார் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனப் பகுதியில் 3  முதல் 7 நாள்கள் வரைத் தங்கி விரதமிருந்து வழிபடுவதற்காக வரத் தொடங்கியுள்ளனர். ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில், பாபநாசம் முண்டன்துறை வனப் பகுதிக்குள் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், மது உள்ளிட்டவை கொண்டுசெல்ல வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர். இதையடுத்து, பாபநாசம் சோதனைச் சாவடியில் வனச்சரகர் பரத் தலைமையில் வனத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  கோயில் மற்றும் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் பயணிகள், பக்தர்களிடம் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
காரையாறு சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களையோ, மதுபாட்டில்களையோ கொண்டு செல்ல அனுமதி இல்லை.  மீறி கொண்டு சென்று பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவார்கள்.

மேலும், வனப் பகுதியில் எரிவாயு அடுப்பு பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT