தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு விலக்கு: 5 அமைச்சர்கள் தில்லி பயணம்

DIN

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்த, ஐந்து தமிழக அமைச்சர்கள் புதன்கிழமை (ஜூலை 19) இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரை, தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT