'சிபிஐ வழக்கு'- கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
தன் மீது பதியப்பட்ட சிபிஐ வழக்கு மனுவை தள்ளுபடி செய்யுமாறு கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளக்கிழமைதள்ளுபடி செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சட்ட விரோதமாக ஒருதரப்பிடம் இருந்து மற்றொரு தரப்புக்கு பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரினை அடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனத்தின் அந்நிய முதலீட்டுக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகக் கூறி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
இந்த வழக்கில் ஜூலை 21-ந் தேதி ஆஜராகி உரிய விளக்கம் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு ஜுலை 19-ந் தேதி சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். ஆனால், கார்த்தி தள்ளுபடி செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.