தமிழ்நாடு

அடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில்  பொறியியல் சேர்க்கை நடக்குமா? அமைச்சரின் ‘பகீர்’ பதில்!

அடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில்  பொறியியல் சேர்க்கை நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில்  பொறியியல் சேர்க்கை நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள +2 மதிப்பெண் அடிப்படையில்  பொறியியல் சேர்க்கை  என்பதனை தொடர விரும்புவதாக நாங்கள்  தெரிவித்துள்ளோம். ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தும் பொழுது நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அதேபோல பட்ட மேற்படிப்புகளுக்கு நாம் 'டான்செட்' முறையினை பின்பற்றி வருகிறோம். அதனையும் மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT