தமிழ்நாடு

மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: மத்திய அமைச்சருக்கு கடிதம்

DIN

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம்: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறையின்கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த முடிவு நாட்டில் உள்ள விவசாயிகளையும், விவசாயக் கூலிகளையும், நுகர்வோரையும் மிகவும் மோசமாகப் பாதிக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பது இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையுடன் தெளிக்கப்படும் ரசாயனம் மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் இதை உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் எதிர்க்கின்றன.
தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இதுவரை மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பான பரிசோதனைகள் ஏதும் நடைபெறவில்லை. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் இந்த மரபணு மாற்ற பயிர்களை எதிர்த்துள்ளதுடன், கேரள மாநில சட்டப்பேரவையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT