தமிழ்நாடு

தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து தமிழ்நாடு இல்லம் நோக்கி விவசாயிகள் பேரணி

DIN

புதுதில்லி: தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க தமிழ்நாடு இல்லம் நோக்கி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றுள்ளனர்.

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ராம்நாத் கோவிந்தை அதிமுக அம்மா அணி ஆதரிக்கும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த், இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தில்லி புறப்பட்டு சென்றார். நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக தில்லியில் ஏற்கெனவே முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பயிர் கடன் உள்ளிட்ட கோரிக்கை பற்றி வலியுறுத்த உள்ளனர்.

மேலும், முதல்வர் பழனிசாமி தங்களை சந்திக்க மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று தென்னக நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கண்டுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு வாக்களித்ததற்காக செருப்பால் அடித்துக் கொள்ளும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT