ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தின கருத்தரங்கில், விஞ்ஞானி நெல்லை சு. முத்து எழுதிய 'அற்புத மனிதர் அப்துல் கலாம்' எனும் நூலை பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் வெளியிட அதைப் பெறுகிறார் நூலாசிரியர் 
தமிழ்நாடு

நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம்: நெல்லை சு. முத்து புகழஞ்சலி

நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணி ஆற்றியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்றார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து.

DIN

நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணி ஆற்றியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்றார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து.
அப்துல் கலாம் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறை, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இளைஞர் எழுச்சி இயக்கம் ஆகியவை சார்பில் 'டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்-கனவுகள் 2020' எனும் தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகித்தார். அவர் பேசியது: அறிவியல் வளர்ச்சிக்காக அப்துல் கலாம் ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டார். மாணவர்கள் அவரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதிகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பல்கலைக் கழக பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ பேசியது: சிறந்த குடியரசுத் தலைவராக, சிறந்த மனிதராக, சிறந்த ஆளுமைப் பண்பு கொண்டவராக, நேர்மையாளராக விளங்கியவர் அப்துல் கலாம். அவரது வழியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில், அப்துல் கலாம் குறித்து விஞ்ஞானி நெல்லை சு. முத்து எழுதியுள்ள 'அற்புத மனிதர் அப்துல் கலாம்' எனும் நூலை பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட, நூலாசிரியர் பெற்றுக் கொண்டார்.
கருத்தரங்கில், படக் காட்சிகள் மூலம் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு, அறிவியல் தொழில்ட்பம், விண்வெளி கோட்பாடுகள் குறித்து நெல்லை சு. முத்து பேசியது: அப்துல் கலாம் குறித்து நான் ஏற்கெனவே அறிவியல் அறிஞர் அப்துல் கலாம், வெற்றித் திருமகன் அப்துல் கலாம், கலாம் அடிச்சுவட்டில் ஆகிய 3 நூல்கள் எழுதி இருக்கிறேன். இப்போது அற்புத மனிதர் அப்துல் கலாம் என்ற நூல் வெளியிடப்பட்டது.
அன்பு, அறிவு, தேற்றம், அவாமின்மை, வியூக தொழில்நுட்பம் ஆகிய இவை ஐந்தும் மிக அவசியம் என அப்துல் கலாம் வலியுறுத்தினார். ஒருவர் தான் செய்யும் பணியில் அன்பு செலுத்த வேண்டும். அப்போதுதான் பணியின் மீது ஈடுபாடு அதிகரிக்கும், பணியில் சிறந்து விளங்க முடியும்.
இந்திய நாடு வல்லரசாக மாற நல்ல உள்ளம் படைத்தவர்கள், நல்ல தலைவர்கள், நல்ல அதிகாரிகள் தேவை. இதைத்தான் தங்க முக்கோணம் தேவை என அவர் குறிப்பிட்டார். உணவு தேவையில், அதாவது வேளாண்மையில் தன்னிறைவு பெற வேண்டும். சுகாதாரத்துடன் கூடிய கல்வி, தகவல் தொழில்நுட்பம் பெருக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவர் கலாம். எந்த நிலையிலும் நேர்மை தவறாமல் வாழ்ந்தார். அவர் வகுத்துத் தந்த வழியில் இன்றைய இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கில், தான் எழுதிய நூல்களான அறிவியல் வரலாறு-3 தொகுப்புகள், அறிவியல் நூல்கள், அறிவியல் எழுச்சி, இந்தியா-20, பாரதி காவியம் உள்ளிட்ட நூல்களை பல்கலைக் கழக நூலகத்தில் வைப்பதற்காக துணைவேந்தரிடம் நெல்லை சு. முத்து வழங்கினார்.
பல்கலைக் கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல்துறைத் தலைவர் பியூலா சேகர், அறிவியல் புல தலைவர் ந. கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இளைஞர் எழுச்சி இயக்க ஆலோசகர் சு. செல்லப்பா, நெல்லை சு. முத்து குறித்து அறிமுக உரை ஆற்றினார்.
பேராசிரியர் பி. மாதவ சோமசுந்தரம் வரவேற்றார். அப்துல் கலாம் இளைஞர் எழுச்சி இயக்கத்தின் மாநில தலைவர் சொ. ஆறுமுகம் நன்றி கூறினார்.
ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளை
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இளைஞர் எழுச்சி இயக்கம் சார்பில் அவரது பெயரில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கல்வி அறக்கட்டளை தொடங்கி ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும். இந்த நிதியிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அமைப்பின் மாநிலத் தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார். இந்த அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் நிதி அளிப்பதாக நெல்லை சு. முத்து அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT