தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது

DIN

'நீட்' தேர்வுக்காக திமுக நடத்தும் போராட்டம் தேவையற்றது என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 2012-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது மு.க. அழகிரி உள்ளிட்ட திமுகவினர் மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது சந்தர்ப்பவாதம்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுக்கு மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தரும் நாளான்று, அதை திசைதிருப்பும் நோக்கத்தோடு திமுக இப்போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டம் தேவையற்றது, கண்டனத்திற்குரியது என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT