முகப்பு
தமிழ்நாடு

ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர்: எம்.எல்.ஏ பாஸ்கர் கிண்டல்

புதுச்சேரியில் ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கிண்டல் செய்தார்.

Updated On : 1 ஜூன், 2017 at 12:36 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:09 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கிண்டல் செய்துள்ளார்.

அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்): எனது தொகுதியில் 3 காவல்நிலையம் வருகிறது, டி. நகர், லாஸ்பேட்டை காவல் நிலையங்கள் உள்ளன. காவலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. புறக்காவல் நிலையத்திலும் போதிய காவலர்கள் இல்லை. ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். லாஸ்பேட்டை காவல் நிலையம், புறக்காவல் நிலைய பகுதிகளில் வழிப்பறி, செயின்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

முதல்வர்: கரையாம்புத்தூர், கரிக்காலம்பாக்கத்தில் புறக்காவல் நிலையம், அம்பகரத்தூர், தாகூர் கல்லூரி அருகே, மாஹே பகுதியில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றனர். அரசு கலைக்கல்லூரி அருகே புறக்காவல் நிலையம் உள்ளது. செயின்பறிப்பு, வழிப்பறி போன்றவை திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசில் இல்லை. ரௌடிகள் பிரச்னை தான் உள்ளது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.

Advertisement

பாஸ்கர்: ரிட்டயர்மெண்ட் ஆன ரௌடிகளை தான் தேடி வருகின்றனர். நடைமுறையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகளை தேடுங்கள்.

அமைச்சர் நமச்சிவாயம்: அனைத்து ரௌடிகள் பட்டியலும் பாஸ்கர் எம்எல்ஏவுக்கு தெரியு்ம போல. பட்டியல் நாங்கள் ஏன் தர வேண்டும். ரௌடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

முதல்வர்: நீங்கள் ரௌடிகள் பட்டியலை தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். புதுவையில் ரௌடிகள் நடமாட்டமே இல்லை. கடுமையாக செயல்படுவதால் தான் குற்றம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.