தமிழ்நாடு

பாலில் ரசாயனம்: சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

DIN


சென்னை: தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்குரைஞர் சூர்யபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக அமைச்சர் ஒருவரே குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாலில் ரசாயனம் கலந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் தனியார் நிறுவனப் பாலில் ரசாயனம் கலப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT