தமிழ்நாடு

4 பேரை கொன்ற ஒற்றை யானை காட்டுக்குள் விடப்பட்டது

DIN

கோவை அருகே 4 பேரை கொன்ற யானை ஆனைமலை வனப்பகுதியில் விடப்பட்டது

கோவை வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மதுக்கரை வனச் சரகத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு வெளியேறிய 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை, அதிகாலை 3.30 மணியளவில் போத்தனூரை அடுத்த கணேசபுரம், வெள்ளாளபாளையம் பகுதிக்குள் நுழைந்தது தாக்கியதில் சிறுமி காயத்ரி (12), நாகரத்தினம் (53), ஜோதிமணி (75) பழனிசாமி (73) ஆகிய நான்கு உயிரிழந்தனர்.

12 வயதுச் சிறுமி, இரு மூதாட்டிகள், ஒரு முதியவர் என நான்கு பேர் சில மணி நேர இடைவெளியில் யானையால் கொடூரமாக கொல்லப்பட்டதும் அப்பகுதி மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த கோவை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து 4 பேரை கொன்ற யானையை நீண்ட நேரம் போராடி  மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.

இந்நிலையில், பிடிபட்ட ஒற்றை யானையை, ஆனைமலை வனப்பகுதியான வரகழியார் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT