தமிழ்நாடு

தென்மேற்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பரவியுள்ளது: வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தென்மேற்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பரவியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவ மழை பரவியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

கடந்த 24 மணி  நேரத்தில் அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செ.மீ. மழையும், ஆலங்காயத்தில் 9 செ.மீ. மழையும், வானூர் மற்றும் செங்கம் பகுதிகளில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தற்பொழுது மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், அடுத்து வரும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT