தமிழ்நாடு

கருணாநிதியைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம்? பரிசீலிக்க பேரவைத் தலைவர் உறுதி

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் பேரவைப் பணியின் 60 ஆண்டு நிறைவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என பேரவைத் தலைவர் பி.தனபால் உறுதி அளித்தார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புதன்கிழமை பங்கேற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியது:
கருணாநிதியைப் பாராட்டி...: தமிழக சட்டப்பேரவை வரும் 14-ல் கூடுகிறது. கருணாநிதியின் சட்டப் பேரவைப் பணி வைர விழாவை ஒட்டி அவரைப் பாராட்டி சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
முக்கிய மசோதாக்கள்: மானியக் கோரிக்கைகளின் மத்தியில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மானியக் கோரிக்கையின் போதே சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மீதியுள்ள மசோதாக்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றப்படும். இதுவரை என்னிடம் மசோதாக்கள் எதுவும் தரப்படவில்லை.
திமுகவுடன் ஒற்றுமை: இந்த கூட்டத் தொடர் 24 நாள்கள் நடப்பதை குறைவான நாள்கள் நடப்பதாகக் கூற முடியாது. 20 நாள்களில்கூட மானியக் கோரிக்கைகள் நடந்துள்ளன. எனவே இது சரியானது. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருமே திருப்தியாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை அமைத்துத் தந்திருக்கிறார்கள். தி.மு.க.வினர் திருப்தியாக இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதை அனைவருமே ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எந்தக் கட்சியில் எத்தனை பேர்? சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், மானியக் கோரிக்கையில் எந்தக் கட்சியில் எத்தனை பேர் பேச வேண்டும் என்பதில் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும்.
வெட்டுத் தீர்மானங்களும் தரப்பட்டுள்ளன. அதுபற்றி அந்தந்த உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவையில் தி.மு.க.வினரின் செயல்பாடு தொடர்பான பிரச்னை உரிமைக் குழுவிடம் பரிசீலனையில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT