தமிழ்நாடு

தமிழகத்தில் சிறிய நகரங்களிடையே விமான சேவை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

DIN

சென்னை: தமிழகத்தில் சிறிய நகரங்களிடையே விமான சேவையை உருவாக்கும் மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில்,   முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் மத்திய அரசுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கும் விமான சேவையை விரிவு படுத்தும் விதமாக 'உடான்' என்னும் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த சேவையில் தமிழகமும் இணைய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் 'உடான்' திட்டத்தில்,  தமிழகம் இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று கையெழுத்தானது.

இந்த சேவையானது தமிழகத்தில் முதல்கட்டமாக ஓசூர் - நெய்வேலி -  சேலம் ஆகிய நகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த விமான சேவையின் மூலம் வர்த்தகம், தொழில் துறை ஆகிய துறைகளில் கணிசமான வளர்ச்சி உருவாகும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்கு குறிபில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT