தமிழ்நாடு

சென்னை பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடி பார்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடி பார்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தியாகராயர் நகரில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு இன்று அலுவலகத்திற்கு வந்த பார்சல் ஒன்றை ஊழியர்கள் பிரித்த பொழுது, உள்ளே வெடிகள்  தயாரிக்கப் பயன்படும் மருந்து மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக அத்துடன் ஒரு மிரட்டல் கடிதமும் இருந்துள்ளது.

இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் மோப்ப நாய் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT