முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகை வரலட்சுமி சந்தித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:44 PM
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகை வரலட்சுமி சந்தித்தார்.

வரலட்சுமி துவங்கி உள்ள பெண்கள் பாதுகாப்பு அமைப்பு குறித்து முதல்வருடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வருடான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வரலட்சுமி கூறுகையில், மனரீதியாகவும், உடல் ரீதயாகவும் பெண்கள் அதிகயளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்களை அதிகயளவில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தாக வரலட்சுமி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →