தமிழ்நாடு

ஐஐடி: பணி பெறும் மாணவிகள் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு

சென்னை ஐஐடியில் 2016-17 வளாகத் தேர்வுகளில் பணி வாய்ப்பு பெறும் மாணவிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

DIN

சென்னை ஐஐடியில் 2016-17 வளாகத் தேர்வுகளில் பணி வாய்ப்பு பெறும் மாணவிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான வளாகத் தேர்வுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மொத்தம் 769 மாணவ, மாணவிகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிடக் கூடுதலாகும். கடந்த 2015-16 கல்வியாண்டில் 725 மாணவ, மாணவிகள் மட்டுமே வளாகத் தேர்வு மூலம் பணி வாய்ப்பைப் பெற்றனர்.
மாணவிகளைப் பொருத்தவரை 2015-16 ஆம் ஆண்டில் 109 பேர் மட்டுமே வளாகத் தேர்வு மூலம் பணி வாய்ப்புப் பெற்றனர். ஆனால், இம்முறை 206 மாணவிகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT