தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் உச்சிமாகாளி முன்னிலை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
போலீஸார் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினாó. இதைத் தொடர்ந்து நுழைவுவாயில் அருகே சிறிது நேரம் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மாநிலத் தலைவர் மாரியப்பன் கூறியது: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எதுவும் வசூல் செய்யவில்லை. எனவே, தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT