தமிழ்நாடு

மாட்டிறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

மாட்டிறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

DIN

மாட்டிறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை முதல்வர் வி.நாராயணசாமி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பேரவையில் அவர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து பேசியதாவது:
மத்திய அரசின் தடை கால்நடை வளர்ப்போரின் உரிமைப் பறிப்பதாகும். அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் உணவை உண்ணவும், விரும்பும் மதத்தைக் கடைப்பிடிக்கவும் தனிமனித சுதந்திரம் உண்டு. அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. அனைத்துத் தரப்பினரும் பல்வேறு வகை உணவுகளை உண்டு வாழ்கின்றனர். எனவே, அவர்கள் உண்ணும் உணவுக்குக் கட்டுப்பாடு விதிக்க முடியாது.
மத்திய அரசின் இந்தத் தடையை எதிர்த்து, புதுச்சேரியில் அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.
எனவே, மத்திய அரசு மாட்டிறைச்சி மீதான தடையைத் திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் முதல்வர் வி.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT