தமிழ்நாடு

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் திருட்டு

DIN

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர்- வடக்குமாதவி சாலை, கணபதி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மருதமுத்து (60). இவர், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், அவரது மனைவியின் சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கடந்த 4 ஆம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார்.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருதமுத்து அளித்தப் புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT