தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுப்போம்

DIN

டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் குரல் கொடுப்போம் என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவரிடம், 6 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்து கூறியது: டெல்டா மாவட்ட விவசாயிகளின் உரிமைக் குரலுக்கு வலு சேர்ப்பதற்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். இப்பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக சட்டப்பேரவையில் பேசுவோம் என்றார்.
பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு வந்த அவருக்கு மருத்துவக் கல்லூரி அருகே முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT