தமிழ்நாடு

பி.இ. மாணவர் சேர்க்கை: சமவாய்ப்பு எண் வெளியீடு

DIN

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் சமவாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் இந்த சமவாய்ப்பு எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

சமவாய்ப்பு எண் எதற்கு? பி.இ. கலந்தாய்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் -ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் -2 நான்காவது பாட மதிப்பெண் பார்க்கப்படும்.
இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
1 லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவர்களுக்கு...: இதற்காக 2017 -18 கல்வியாண்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேருக்கு சம வாய்ப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை வெளியிடுவதைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு (2016) 27 பேரும், 2015 -இல் 80 பேரும், 2014 -இல் 114 பேரும் சமவாய்ப்பு எண்ணை பயன்படுத்தி பி.இ. இடங்களைத் தேர்வு செய்தனர். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 71,275 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள். மாற்றுத் திறனாளிகள் பிரிவின் கீழ் 573 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவின் கீழ் 2,027 பேரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு: பொதுவாக, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடங்கிய பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். ஆனால், இம்முறை எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள் வரும் 26 -ஆம் தேதிக்குள் வெளியாக உள்ளன. எனவே, திட்டமிட்டபடி பி.இ. கலந்தாய்வை வரும் 27 -ஆம் தேதி தொடங்க முடியுமா எனத் தெரியவில்லை. கலந்தாய்வு தள்ளிப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
பி.ஆர்க். விண்ணப்பம்: பி.ஆர்க். கட்டடவியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 25 -ஆம் தேதி தொடங்கப்படும் என்றார் அவர்.


பி.இ.: 6,083 பேர் கூடுதலாக விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 6,083 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்களை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் விண்ணப்பித்த 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேருக்கு சமவாய்ப்பு எண் அளிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6,083 பேர் கூடுதலாகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேருக்கு சமவாய்ப்பு எண் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT