தமிழ்நாடு

குடிநீர்ப் பிரச்னை: வந்தவாசியில் 2 பகுதிகளில் சாலை மறியல்

DIN

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசியில் 2 பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி நகராட்சி, 18}ஆவது வார்டுக்கு உள்பட்டது பெரிய காலனி. இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
பெரிய காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவிழாவையொட்டிகூட குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை பாலு உடையார் தெருவில் திரண்டனர். பின்னர், திடீரென காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.
மற்றொரு இடத்தில் சாலை மறியல்: போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாலு உடையார் தெருவில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்றனர். பின்னர், அங்குள்ள வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை, குளத்துமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில், 300}க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பானைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வந்தவாசி நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த மறியலால் வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT