தமிழ்நாடு

100ஆண்டுகள் பழைமையான கிணற்றில் வறட்சியிலும் தண்ணீர் வற்றாத அதிசயம்

DIN

கொள்ளிடம் ரயில் நிலையம் அருகேயுள்ள 100ஆண்டுகள் பழைமையான கிணற்றில் கடும் வறட்சியிலும் தண்ணீர் குறையாமல் உள்ளது. இக்கிணற்றை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் ரயில் நிலையத்தில் கடந்த 1912}ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது பெரிய கிணறு தோண்டப்பட்டு, அதன் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டது. இந்த தொட்டி 14,300 லிட்டர் கொள்ளவு கொண்டதாகும்.
கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நீர்த் தேக்க தொட்டியிலிருந்து, நீராவி ரயில் எஞ்சினுக்கு தினமும் தண்ணீ எடுத்துவந்தனர்.
நீராவி ரயில் எஞ்சின் பயன்பாடு நிறுத்தப்பட்டதையடுத்து, தற்போது இந்த கிணற்று நீர் மின்மோட்டார் மூலம் ரயில் நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில் ஆண்டுகளாக போதிய மழையின்றி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றிவிட்ட நிலையில், 100ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கிணற்றில் மட்டும் நீர் மட்டம் குறையாமலும், நீரின் சுவை மாறாமலும் உள்ளது. இதை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT