தமிழ்நாடு

ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டம்!

DIN

கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கொசுபிடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள மந்திதோப்பு பகுதியில் சாலையை கடந்து செல்லக்கூட முடியாத அளவிற்குக் கழிவு நீர் தேங்கியிருப்பதால் அங்கே வசிக்கும் பல குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக் கடியால் பலருக்கு டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள், தேங்கியிருக்கும் கழிவு நீரில் கொசுபிடிக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். மேலும் கழிவு நீரில் காகித கப்பல்களை விட்டும், கோஷங்களை எழுப்பியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT