தமிழ்நாடு

வரும் தேர்தலில் அதிமுக அணிகள் ஒருங்கிணையும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

DIN

வரும் தேர்தலில் அதிமுகவில் உள்ள அனைத்து அணியினரும் ஒருங்கிணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெல்வோம் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் ராயனூரில் அங்கன்வாடி மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:
வரும் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கரூர் மாவட்ட உள்ளூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாயும், ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு 4,000 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இப்பிரச்னையை தமிழக முதல்வர் மூலம் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்.
கடும் வறட்சியால் தமிழ்நாடு காகித ஆலையில் மூன்று யூனிட்டுக்கு தற்போது ஒரு யூனிட் மட்டுமே இயங்குகிறது. எனவே ஆலைக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று புகழூர் காவிரியாற்றில் அரை டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்ட முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT