தமிழ்நாடு

இணையம் வழியே மணல் விற்பனை

DIN

இணையதளம், செல்லிடப்பேசி செயலி வழியே மணல் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டமானது ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள் ள து.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவி ப் பு:} மணல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட பொதுப்பணித் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ள் ஹய்க்.ண்ய்) மற்றும் செல்லிட ப்பேசி செயலி (ற் ய்ள்ஹய்க்) ஆகியவற்றின் மூலம் பொது மக்களும், லாரி உரிமையாளர்களும் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் ப ட்டுள்ளது.
இதன் மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் நேரடியாகச் சென்று மணலை பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சி அளிக்கப்படும்: மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள், செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு பொதுப்பணித் துறையின் மூலமாக மூன்று நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கென தனியாக ஒரு உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மணல் இணைய சேவை என்ற இந்தப் புதிய திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பொது மக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதனால், உபயோகிப்பாளர்களின் மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணல் தங்குதடையின்றி குறைவான விலையில் கிடைக்கவும் வழி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர் ஆதாரத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT