தமிழ்நாடு

ஜிப்மர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

தினமணி

முதல்நாளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். இங்கு புதுச்சேரி கிளையில் 150, காரைக்கால் மற்றும் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். ன இடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்ப தனியாக அகில இந்திய அளவில் ஆன்லைன் நுழைவு தேர்வு ஜூன்  4}ந்தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நடைப்பெற்றது. காலை, பிற்பகல் என இருவேளையாகத் தேர்வு நேரம் பிரிக்கப்பட்டு நடைபெற்றது. காலையில் 83 ஆயிரத்து 720 மாணவர்களும், பிற்பகலில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 மாணவர்களும் தேர்வு எழுதினர்.

அதன் முடிவுகள் கடந்த 10}ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு தொடங்கி உள்ளது. வரும் 30 ம் தேதி வரை நடைபெறவுள்ள கலந்தாய்வில் புதுச்சேரியில் 50 இடங்களுக்கும் , காரைக்காலில் 15 இடங்களுக்குமான மொத்தம் 65 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களுக்கும் , மாற்று திறனாளி மாணவர்களுக்கான 5 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு பணி

இதனையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை காலை 8 மணிமுதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. பிற்பகல் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலிருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை ஓபிசி  மாணவர்களுக்கும் , 30 ம் தேதி புதுச்சேரியை சார்ந்த மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு பின் ஜூலை 3-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT