தமிழ்நாடு

பத்திரப் பதிவு கட்டணம் படிப்படியாகக் குறைக்கப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

DIN

பத்திரப்பதிவு கட்டணம் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
சட்டப்பேரவையில் பத்திரப் பதிவு கட்டண உயர்வு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா விஜயதரணி பேசியது:- நிலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதேசமயம் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அரசு எந்த நோக்கத்துக்காக சந்தை வழிகாட்டி மதிப்பைக் குறைத்ததோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். பத்திரப் பதிவு செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். எனவே, பத்திரப் பதிவு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றார்.
சட்டப்பேரவை திமுக உறுப்பினர் சுதர்சனம்: மற்ற மாநிலங்களைவிட பத்திரப்பதிவு கட்டணம் தமிழகத்தில் அதிகம். அதனைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி கூறியது:- நிலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை, பரிமாற்றம், தானம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்படி, 4 சதவீதமாக உயர்த்தியும்கூட ரூ.430 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், காங்கிரஸ் உறுப்பினர் கூறியதுபோல பத்திரப்பதிவு செய்ய யாரும் முன்வராமல் இல்லை. சந்தை மதிப்பைக் குறைத்து, பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரே நாளில் 15 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு ஒரே நாளில் ரூ.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
எனினும், அரசின் வருவாய் இழப்பீடு குறைந்து, நல்ல வருவாய் வரும் நிலையில் பத்திரப்பதிவு கட்டணம் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT