தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரைக் கண்டித்து அனைத்துவணிக சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம்
கடலூர் - சேலம் வரையிலான 162கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் நெய்வேலி அருகே உள்ள குரவன் குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான நான்கு வழி சாலையாக அமைக்கப்படு
கடலூர் - சேலம் வரையிலான 162கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் நெய்வேலி அருகே உள்ள குரவன் குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான நான்கு வழி சாலையாக அமைக்கப்படுகிறது.
இச்சாலை அமைக்கும் பணி தரமற்றதாக அமைக்கப்படுவதாகவும், அனுபவமில்லாத நபர்களை வைத்து சாலைகள் போடப்படுவதாகவும் குற்றம் சாட்டி, நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.
ஒருசில மருந்து கடைகளை தவிர திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 1200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவச தேவைகள் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.