முகப்பு
தமிழ்நாடு

போலிப் புனிதர் பன்னீர்: தினகரன் கடும் தாக்கு!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு போலிப் புனிதர் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On : 9 மார்ச், 2017 at 1:58 PM
பகிர்:

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு போலிப் புனிதர் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு போலிப் புனிதர். திமுக என்னும் பொம்மலாட்ட நூலில் ஆடும் ஒரு போலிப்  புனிதர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று அவதூறு பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.இவ்வாறு செயல்பட்டு வரும் பச்சைத் துரோகி பன்னீருக்கு கில்லட்டின் கதிதான் காத்திருக்கிறது.  

Advertisement

இவ்வாறு தினகரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தினால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட பன்னீர்செல்வம் தலைமையிலான அதிருப்தி அணியினரும் உரிமை கோரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் போது, தினகரனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.