தமிழ்நாடு

மீண்டும் பணி வழங்க மக்கள் நலப் பணியாளர்கள் முதல்வரிடம் மனு

தினமணி

மீண்டும் பணி வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மக்கள் நலப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13 ஆயிரம் 500 மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த வந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழினிசாமியை, மக்கள் நலப் பணியாளர்கள் இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி முதல்வரிடம் கோரி மனுவை வழங்கினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT