முகப்பு
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2017 at 3:52 PM
பகிர்:

சென்னை: குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சட்டப் பஞ்சாயத்து என்னும் அரசு சாரா அமைப்பு ஒன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

ஊழல் குற்ற வழக்கு ஓன்றில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள  சசிகலா ஆளுங்கட்சியின் முககிய பொறுப்பில் இருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

Advertisement

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.