முகப்பு
தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க

Updated On : 23 மார்ச், 2017 at 11:26 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:48 PM

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து, அவரது தொகுதியான ஆர்.கே. நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று வியாழக்கிழமை (மார்ச் 23) கடைசி நாளாகும்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த இன்று தனது டுவிட்டர் பக்க பதிவில்,  My support is for no one in the coming elections.
    — Rajinikanth (@superstarrajini) March 23, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கங்கை அமரன் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.