தமிழ்நாடு

சசிகலா அணிக்கு தொப்பி; ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கீடு

தினமணி


புது தில்லி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின் விளக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலைப் போலவே இருப்பதால் இரட்டை மின் விளக்கு சின்னத்தை ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினர். இதையடுத்தும ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதே போல, சசிகலா தரப்பினர் அளித்த 3 சின்னங்களில் ஒன்றான ஆட்டோரிக்சாவை முதலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதனை மாற்றி தொப்பி சின்னம் ஒதுக்குமாறு சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின் விளக்கு சின்னத்திலும் போட்டியிடுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT