முகப்பு
தமிழ்நாடு

மின்னணு குடும்ப அட்டை: பெயர் சரிபார்க்கும் பணி தீவிரம்

குடும்பத் தலைவர் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னரே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

குடும்பத் தலைவர் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னரே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் பொருள்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைக்கும் நோக்கத்தில் பழைய குடும்ப அட்டைக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை இம்மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சில மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து, சென்னை உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →