முகப்பு
தமிழ்நாடு

மிதக்கும் கான்கிரீட் படகு: வி.பி.எம்.எம். மாணவிகள் வடிவமைப்பு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகள் தங்களது புராஜெக்ட்டாக மிதக்கும் கான்கிரீட் படகை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகள் தங்களது புராஜெக்ட்டாக மிதக்கும் கான்கிரீட் படகை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்கள்.

இக் கல்லூரியில் இறுதியாண்டி சிவில் பிரிவு மாணவிகள் பாலச்சந்தர் ஷிரோமி, கீர்த்திகா, பாண்டிமீனா ஆகியோர் இயக்குநர் தில்லைக்கரசி, துறைத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மிதக்கும் கான்கிரீட் படகை வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து மாணவிகள் கூறியதாவது: இந்த மிக்கும் படகு 1.25 மீ நீளம், 90 செமீ அகலம், 37 கிலோ எடை கொண்டது. படகை உருவாக்க முதலில் படகின் வடிவத்திற்கு அச்சு வார்க்கப்படுகிறது. பின்னர் அந்த அச்சின் மேல் சிமெண்ட், சுண்ணாம்பு, சூப்பர் பிளாஸ்டிசைஷர், நைலான் நார், ஜியோ சிந்தடிக் மெஷ் போன்ற பொருட்கள் கலந்த கலவை பூசப்பட்டு 7 நாட்கள் காயவைக்கப்படுகிறது. இறுதி நிலையாக மட்டி மற்றும் பெயிண்டினால் மேல்பூச்சு பூசப்பட்டு, படகானது பயன்பாட்டிற்கு தயாராகிறது. சாதாரண படகானது இரும்பு மற்றும் மரத்தினாலானது. உற்பத்தி செலவு அதிகம். ஆனால் இந்த மிதக்கும் கான்கிரீட் படகை உருவாக்க உற்பத்தி செலவு ரூ.400 மட்டுமே. இதனை பராமரிப்பது மிகவும் எளிது.

இந்தப் படகானது, படகின் எடையிலிருந்து 75 சதவீத கூடுதல் எடையினைத் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இதனைப் பயன்படுத்தவதன் மூலம் எண்ணெய் கசிவினால் வரும் தீ விபத்தினை தடுக்க முடியும். இதனை ஏரி, குளம், குட்டை போன்றவற்றில் பயன்படுத்தலாம். இதன் வடிவத்தை மாற்றியமைப்பதன் மூலம் கடலில் கூட இதனைப் பயன்படுத்தலாம். 

சமுதாயத்திற்கு பயனுள்ள, எளிய வகையான மிதக்கும் கான்கிரீட் படகை வடிவமைத்துள்ள மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, முதல்வர் ராஜசேகரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →